அழுத கண்ணீர்: கே. அசோகன்

Updated on
1 min read

வானழுதகண்ணீர்தான்
வளமான மழை யாகும்!
பேனாமுள்ளின் கண்ணீரே
புத்தகத்தின் எழுத் தாகும்!
ஆணழுதால் அவமானமென
அழாதிருந்தி டுவார்!
பூஅழுவும் கண்ணீர்தான்
பூந்தேனென் போமே!

பூமித்தாய் அழுகின்றாள்
பூகம்பத்தை தருகின்றாள்
பாவியழுதால் மனந்திருந்தி
பக்குவ மனிதனென் போமே!
தாபத்தால் முதிர்கன்னி
தவித்தே அழுதிடும் கண்ணீர்
ஆபத்தாய் மாறுமுன்னே
அழகு- மாலை சூடலாமே!

நாயழுகும் குரல்கேட்டால்
நடுங்கியே அஞ்சிடுவோர்
சேயழுதால் அரவணைத்தே
செல்லமாய் கொஞ்சிட்ட
தாயவளை தவிக்கவிட்டே
தாயழுகும் கண்ணீரால்
தளராத நெஞ்சுடை யோர்
வாய்விட்டு அழுவதற்கும்
விழிகளுமே தடையாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com