அழுத கண்ணீர்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
அம்முவாகத்   திரைத்துறையின்   உள்நு   ழைந்தே            அடுத்தடுத்து   சாதனைகள்   புரிந்த   பெண்ணைத்தம்முடைய   கட்சிகொள்கை    பரப்பு   தற்குத்            தகுதியென   எம்சிஆர்தான்   பதவி   ஈயதம்மறிவால்   செயல்பாட்டால்   கடுமு   ழைப்பால்            தலைவர்தாம்   மறைந்தபின்பு    கட்சி   காத்துநம்பிக்கை   நாட்டிஆட்சிக்   கட்டி  லேறி            நன்மைதர   அம்மாவாய்   உயர்ந்து   நின்றார் !வழக்குகளை   வென்றெடுத்தார் !   அம்மா   திட்டம்            வழங்கிமக்கள்   பயன்பெறவே    செயலில்   செய்தார்உழவர்க்குக்   காவிரியை   மீட்ட    ளித்தார்            உரிமையெனக்   கட்சுதீவுக்   குரல்கொ   டுத்தார்முழங்கபகை   நடுங்கிடவே   தில்லி   ஆட்சி            முன்வந்து   செவிமடுக்க   ஆட்சி  செய்தார்இழக்காமல்   தமிழகத்து   நலனைக்   காக்க            இரவுபகல்   ஓய்வுவின்றி   உழைத்துத்  தேய்ந்தார் !கோடிகோடி   சொத்தென்றார் !   மக்க    ளென்னும்            கோடிகளே   சொத்தாக    சேர்த்தி   ருந்தார்ஓடியோடி    செய்தபணி    பொறுத்தி   டாமல்            ஓய்வுதர    நோய்வந்து   சேர்ந்த   போதுநாடிநரம்   பனைத்திலுமே   தமிழ   மக்கள்            நலனுக்காய்ப்    போராடி    எதிர்த்து   நின்றும்ஆடிஉயிர்    அடங்கிற்று !   அழுத   கண்ணீர்            அவர்புகழை  என்றென்றும்   வளர்த்தே  காக்கும் !அழுக்குநதி   கூவத்தைத்   தூய்மை   யாக்கும்            அளவிற்கு   மக்கள்தாம்   அழுத   கண்ணீர்விழுந்தாறாய்   வெள்ளமாகப்   பாய்ந்த   போதும்            விடவில்லை   கூற்றுவன்தான்   முதல்வர்   தம்மை !தொழுகைசெய்து   இசுலாத்தார்   கிறித்து   வர்கள்            தொன்மையிந்து   மதத்தவர்கள்   ஒன்று   சேர்ந்துஅழுதழுது    துடித்துமிறை   காக்க   வில்லை            அக்கண்ணீர்   அவர்புகழை   வளர்த்தே   காக்கும் !          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com