அழுத கண்ணீர் :  H ஹாஜா மொஹினுதீன்

Updated on
1 min read

அழுத கண்ணீர் ஆறாய் பெருகியதில் -
கடல் நீரும் உப்பாய் ஆனதே !   
விட்டுப்பிரிந்ததில்  வீதியிலே நாங்கள் -
விரக்தி போக்க விழித்தும் பாராயோ !

அழுது அழுது சிவந்த கண்களுக்கு ;
ஆறுதல் சொல்லவும் ஆளில்லை !
திரும்பி நீயும் வாராயோ !
திருமுகத்தை காட்டாயோ !

கர்மமே கண்ணென்று ;
களைத்துப்போன உனைக்கண்டு ;
கடல் அன்னையும் அழைத்தாலோ !
அலை ஓசை தாலாட்டில் ; 
அமைதியாக நீ உறங்க !

"மக்களால் நான்.. மக்களுக்காக நான்"
மறக்க முடியாத கம்பீரமான வார்த்தை ! 
அன்பை செலுத்த அம்மா நீ ;
அருகில் வந்து ஆறுதலும் தாராயோ ?

நெஞ்சம் மட்டும் ஆறவில்லை !
நினைத்தும்  பார்க்க முடியவில்லை !
நீ இல்லாத நாட்களை !

கனவிலாவது  வந்து - எங்கள் ;
கண்ணீரை துடைத்துவிட்டு ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com