அழுத கண்ணீர் :அழகூர் .அருண். ஞானசேகரன்

Updated on
1 min read
வண்ணமலர்  அழுதகண்ணீர்  தேனென்  றாகும்         வானமது  அழுதகண்ணீர்  மழையன்  றாகும் !மண்அழுத  கண்ணீரை  ஊற்றென்  போம்நாம்         மனமழுத  கண்ணீரை  புலம்பல்  என்போம் !விண்ணழுத  கண்ணீர்நம்  பசிதனைத்  தீர்க்க         விளைவிக்கும்  பயிர்கள்தனை  மண்ணின்  மேலே !எண்ணங்கள்  அழுதகண்ணீர்  கவிதைகள்  ஆகும்         என்றென்றும்  அழியாநற்  பெருமையைக்  கொள்ளும் !மேகம்தன்  கண்ணீரை  மழையெனப்  பொழிய         மேன்மையுறும்  வயல்வெளிகள், தாகம்  தீர்க்கும் !சோகமெலாம்  நீங்கக்காணும்  உழவர்  உள்ளம்         சோவென்றே  மழையதுவும்  மண்மேல்  பொழிய !தாகமதும்  தீர்வதற்கு  மழையின்றி  மக்கள்         தவிக்கினறார்  சென்னைபோன்ற  பெருநகர்  தன்னில் !வேகமாக  அரசாங்கம்  திட்டங்கள்  தீட்டி         விரைவாக  அணைகள்பல   கட்டிட  வேண்டும் !தென்னைதனின்  கண்ணீரை  கள்ளென்  பார்கள்           திளைப்படையச்  செய்யும்நல்  மருந்தென்  பார்கள் !எண்ணமதில்  தீய்மைபுகச்  செய்திடும்  அதுவே,           என்பதிலே  சந்தேகம்  இல்லையாம்  தானே !நன்னெறியாம் அதுதன்னை  விலக்கல்  என்றே           நன்னூல்கள்  விளக்குவதை  மனதினிற்  கொள்க ! இன்னதனை  மறுப்பவர்கள்  இன்றும்  உள்ளார்          இவர்களெலாம்  திருந்தும்நாள்  என்னாள்  தானோ ?ஏழைமக்கள்  அழுதகண்ணீர்  கூரிய  வாளே           எனக்கூறும்  அறநூல்கள்  உணர்ந்திட  வேண்டும் !பாழைகளைத்  துன்புருத்தி  அவர்கொண்ட  நலனைப்           பறிக்கின்றக்  கொடுமனதை  கொண்டவர்  எல்லாம்மோழைகளே,  அன்னவரை  தருமம்  தாக்கும்;           முயன்றாலும்  அதைத்தடுக்க  முடியா  தவரால் !வாழவைக்க  எண்ணாதது  பாபமே  இல்லை,           வருத்தமுறச்  செய்வதெலாம்  கொடுமை  தானே !பத்துலட்சம்  மதிப்பிலான  மோடிதனின்  உடையைககண்டு                 பாமரர்கள்  அழுதகண்ணீர்,         பலன்தராமல்  போகாதாம்  வருகின்றத்  தேர்தலில்                 பார்க்கத்தான்  போகின்றோம்நாம்!முத்தானப்  பெண்ணுக்கு  ஜெனார்தன  ரெட்டியவன்                 முடித்தானாம்  திருமணத்தை,         முன்னூறு  கோடிக்கும்  மேலானச்  செலவினில்!                  முடிந்ததும்  எந்தவழியில் ?அத்தனைக்  கருப்புப்  பணத்தையும்  நூறுநாளில்                அள்ளிக்கொண்டு  வருவேனென்று,         அன்றுமோடி  சொன்னதனை  கேட்டிட்டு  மக்களவர்                 ஆனந்தக்  கண்ணீர்விட்டார் !பித்தர்களின்  கூட்டமே  பாரதீய  ஜனதாவென                பேதையரும்  அறிந்துகொண்டார்;         பெரிதுமாய்  அன்னவனின்  வாக்குறுதி  தனைநம்பி                பேதையர்கள்  நாமென்றானோம் !  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com