அழுத கண்ணீர்: பொன். குமார்

Updated on
1 min read

கண்ணீருக்குக் காரணம்
கவலை மட்டுமல்ல.
அழுவதால் மட்டுமல்ல
ஆனந்த் தாலும் வரும்.

ஆற்றாமையால்
அழுது வரும் கண்ணீரில்
அடர்த்தி இராது.

அடக்கி வைக்கும் 
கண்ணீருக்கு
அழுத்தமும் அதிகம்.
அர்த்தமும் உண்டு.
அடர்த்தியும் தீவிரம்.

உண்மையாக இருக்க
வாய்ப்பிராது
அழுத கண்ணீர்.

முதலைக் கண்ணீரென
மக்களால் புறக்கணிக்கப் 
படுவதும் உண்டு.

இதயத்தின் ஈரத்தை
அளவைக் காட்டிடும்
தன்மையும் மிக்கது
அழுத கண்ணீர்.

உள்ளத்தில் ஏற்படும்
துன்பத்தைப் பொருத்து
வெளிப் படும் அளவில்
வேறு படும்
அழுத கண்ணீர்.

அனுதாபத்தைப் பெற்றுத் தரும்
ஆற்றல் வாய்ந்தது
அழுத கண்ணீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com