மனிதன் வாழ்க்கையில் எதற்கெல்லாமோ வேலி போடுகின்றான் குற்றங்களை மறைக்க தனக்குத் தானே வேலி போட்டுக்கொள்கின்றான் அடக்கமான பெண் கற்பு எனும் வேலியை தானே போட்டுக்கொள்கிறாள் தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !காற்றுக்கு என்ன வேலி, காதலுக்கு ஏது தோல்வி !காதலியின் கண்பார்வையே காதலுக்கு வேலி பூங்காற்றாய் மாறிவிடு, புன்னகையால் வென்றிடு என் ஜீவன் வாழ்ந்திட வாழ்த்துக்கள் சொல்லிவிடு!காதலினை தடை செய்ய ஏது முள்வேலி ?காதலன்,காதலி இடையே ஏது இடைவெளி காதல் இல்லா வாழ்க்கை வீணாய் போகும் மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !பயிருக்கு பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை காற்று வெளிதனில் காதல் என்பது ஓர் ஒத்திகை வேலியே பயிரை மேய்யுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா வேலி தாண்டிய காதல், நிலை பெற்றிடுமா இருக்குமா !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.