வேலி தாண்டிய காற்று:  கவிஞர் இரா .இரவி 

Updated on
1 min read

வேலி தாண்டிய காற்று பலரை 
வேதனையில் ஆழ்த்தியது  வீழ்த்தியது !

தென்றல் புயல் இரண்டும் காற்றுதான் 
தென்றல் இதம் தரும் நன்மை தரும் !

புயல் மழை தரும் தீமையும் தரும்
புயல் புரட்டிப் போடும் வாழ்க்கையை !

காற்றின் சினம்தான் கொடிய புயல்  
கட்டுப்பாடு இன்றி வீசினால் வினை !

காற்றுக்கு என்ன வேலி என்று அன்றே 
கவிஞர்கள் பாடல் பாடி வைத்தனர் !

கோபம்  மனிதனுக்கு வந்தாலும் தீமை 
கோபம் காற்றுக்கு வந்தாலும் தீமை !

வேண்டாம் என்றும் சினம் என்று 
வள்ளுவர் அன்றே எழுதி  வைத்தார் !

மனிதன் கோபத்தை அடக்க முடியும்  
மனிதன் அடக்குவதில்லை  கோபம் !

காற்றின் கோபத்தை அடக்கிட 
காற்றைத் தவிர மற்றவரால் முடியாது !

நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் நம்
கையில் என்பதை உணர்ந்திடுக !

நல்ல தென்றலாகி இதமும்  நன்மையும்  தருவதும் 
கொடிய புயலாகி தீமை தருவதும் காற்றின் கையில் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com