வேலி தாண்டிய காற்று: கே. அசோகன்

Updated on
1 min read
தென்றலாய் தீண்டும்போது சுகமானது!-வேலிதாண்டிய காற்று கடும்-புயலானது!மன்றல் வந்தபோது மகிழ்வானது! -புழுதிமண்ணோடு வந்தபோது துயரானது!ஆவேச ஒசையோடு சத்தமிட்டாய்- உடன்ஆணிவேரோடு மரங்களை ஏன் சாய்த்திட்டாய்!காதோரம் வந்து முழக்கமிட்டாய்- மின்கம்பங்களையே ஏன் ? வளைத்திட்டாய்!தழுவிவரும் காற்றேநீ தடுமாறினாய்!- வழிதடம்மாறி வேலி தாண்டி கொடுர மானாய்!கொழுகொம்பு செடிகளையும் மாய்த்திட்டாய்!-சிறுகுழந்தைகளையும் ஏனோ மிரட்டி நின்றாய்!உற்றவனாய் உதவிசெய்த உயிர்காற்றே – கொடும்நல்-அரவமென சீறியே பாய்ந்தாய் !கூற்றுவனாய் மாறித்தான் வந்துநின்றாய்- நீகொத்துகொத்தாய் மரங்களையே கொன்றிட்டாயே!நீதழுவிய செயலினால் ரணகளமானது – சுழன்றேநீதழுவிய வேகத்தினால் நெஞ்சம் பதைப்பானதே!பேருதவி செய்துவந்த  காற்றே – உன்றன்பெருந்தன்மை மாயமாய் போனது ஏனோ ?           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com