வேலி தாண்டிய காற்று!  - வேலூர். மூ.மோகன்

Updated on
1 min read

இதமாய்  வருடும் காற்றுதான்
இனிய தென்றலாய்  மணம் வீசும்!
அதுவே ஆவேசத் தாண்டவமாட-
அசுரப் புயலாய் உருமாறும்!

உலகையே புரட்டிட நினைக்கும்  மனம்
உடலில் காற்று இருக்கும்வரைக்கும்!
அலையோய்ந்த கடலாகும் அதுவே
'அந்தி'யில் எங்கோ பறந்து போனதும்!

பாதை தவறும் பிள்ளைகளோடு
'போதைக் கணவனை'யும் திருத்திட
இதமாய் தென்றலாய் வருடாது
சுழலும் சூறையால் பயனேது?

அவசர முடிவுகள் அனைத்துமே
அள்ளித் தெளித்த கோலமாகும்!
எதிலும் பொறுமை தேவையென
இயற்கை சொல்லும் பாடமாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com