கரையில் அத்துமீறி நுழைந்து வெறித்தாண்டவம்ஆடிவிட்டுப் போகிறதுஆண்டுதோறும் புயல்விரிந்து பரந்து நிமிர்ந்து நின்றநூற்றாண்டு மரங்களைநொடியில் சாய்த்து மாவீரம் பேசுகிறதுபசுமரத்து நி்ழலைப்பறித்துக்கொண்டுபோய் எங்கேயோஒளித்துகொள்கிறதுஇருட்டில் விழி இழந்து தவிக்கின்றனஎங்கள் மின்கம்பங்கள்வீட்டுக் கூரைகளுக்கு இறக்கைகள் முளைத்துதிசை தெரியாத வெளியில்தத்தளிக்கின்றனகருவாட்டுத் துண்டுகள் காய்ந்தகடற்கரையில்உடைந்த படகுகளின் மரத்துண்டுகள் சிதறிக் கிடக்கின்றனபள்ளிக்கட்டடங்களைத் தகர்த்துவிட்டுப் போவதைப்பார்த்தாலே புரிந்துவிடுகிறதுகாற்றுக்கு இல்லை கல்வி வாசம்கடலோரத்தில் காவல் தெய்வமாய்க் கோவில் அமர்த்தப்பட்டமாரியம்மனும் கண்மூடிக் கொண்டாளோகோயிலையும் இடித்துவிட்டுப் போகிறதே புயல்காற்றைக் கைது செய்யும் அதிகாரம்யாருக்கும் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்துவிட்டதாம்இயற்கை நீதிமன்றம்சுதந்திர ரவுடியாய்க் காற்று
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.