வேலி தாண்டிய காற்று: சசி எழில்மணி

Updated on
1 min read

வீசுமிலந் தென்றலில்
இதழசைக்கும் பூக்களும்
தலையசைக்கும் மரங்களும்
மகிழ்ச்சியின் காலம் மறந்து
சோகத்தில் ஆழ்ந்ததோ?

உருவானக் காற்றழுத்தம்
உலகினையே சூழ்ந்ததோ?
இல்லாத துயரங்களை
உலகிற்குத் தந்ததோ?

புதுப் புது வேதனைகள்
மனதிற்குள் வந்ததோ?

இயற்கையின் ஆட்டங்கண்டு
உலகே நடுங்கிப் போனதோ?
வேலி தாண்டியக் காற்று
புயலாய் வீசியதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com