வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
கூட்டிற்குள்   காற்றிருந்தால்   உயிரி  ருக்கும்            கூடுவிட்டு   வெளிவந்தால்   உடலி   றக்கும்காட்டிற்குள்   மரமிருந்தால்   வளமி   ருக்கும்            காட்டைவிட்டு   வெளிவந்தால்   மழையி  றக்கும்வீட்டடுப்புள்   நெருப்பிருந்தால்   உலைகொ   திக்கும்            வீட்டைவிட்டு   வெளிவந்தால்   தெருகொ   திக்கும்வேட்டுவைக்கும்   வன்முறைபோல்   காற்று  மிங்கே            வேலிதாண்டி   வெளிவந்தால்   ஊர  ழிக்கும் !கன்னலெனும்   மலர்தேனில்   கலந்தெ   ழுந்து            காவினிலே   தவழ்ந்துமெல்ல   வெளியே  வந்துதென்றலென   வீசினாலோ   உடல்சி   லிர்க்கும்            தேன்சுவைத்த   நாவைப்போல்   மனசு   வைக்கும்மென்மையான    கண்ணகியும்    கணவ   னுக்காய்            மேன்மையான    மதுரையினை    எரித்த   போலவன்மையாக   மாறிகாற்று   வேலி   தாண்டி            வந்தாலோ   ஊரெல்லாம்   பாழாய்ப்   போகும் !காற்றழுத்த   மண்டலந்தான்    கைகள்   வீசிக்            கடல்வேலி   தாண்டிஊருள்   கால்கள்  வைத்தால்நாற்றுகளைப்   பிடுங்கள்போல்   மரங்கள்   சாயும்            நட்டுவைத்த  மின்சாரக்   கம்பம்   வீழும்கூற்றுவனாய்  உயிர்பறிக்கும்   இருளில்  ஆழ்த்தும்            குடிக்கப்பால்   உணவின்றி   வாட   வைக்கும்ஆற்றொண்ணா   அழிவுகளை   அள்ளி   வீசும்            அவலக்குரல்   எங்கெங்கும்   கேட்க   வைக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com