வேலி தாண்டிய காற்று: பொன். குமார்

Updated on
1 min read

காற்றின்றி மனிதர்
வாழ்வதற்கு இல்லை.
காற்றே மனிதர்
வாழ்விற்கு எல்லை.

சீராக இருக்கும் வரை
சிறப்பாக இருக்கும் 
காற்று.

தென்றலாக வந்து
தழுவிச் செல்லும்.
வாடையாக வீசிவாட்டி
க் கொல்லும்.

காற்றின் வேகம்
கூடுதலாகும் போது
கடுமையாக இருக்கும்
அதன் பாதிப்பு.

காற்றைப் போல்
நண்பனும் இல்லை.
காற்றைப் போல்
எதிரியும் இல்லை.

கோப ப் படும் போது
புயலாகி விடுகிறது
காற்று.
புயலாக வந்தால்
புரட்டிப் போடப் படுகிறது
பூமி.

காற்றுக்கு எதற்கு வேலி
கேட்டார் கண்ணதாசன்.
வெளியே போட்டாலும்
வேகமாக தாண்டி விடும்
காற்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com