சுனாமியின் சுவடுகள்:  அழகூர். அருண். ஞானசேகரன்.

Updated on
1 min read
சுனாமியால்  அன்றைக்கு  தமிழகம்  கண்டிட்ட              சுவடுகள்  மறைந்திடும்  முன்னமதய்,       சோதனை  யாகவே  " தானே " வந்தது              சோகத்தில்  தமிழகம்  மூழ்கியதே !இனாமாய்  இன்றிங்கு  வந்தது  " வார்தா "              ஏன்தான்  இயற்கைக்கும்  வன்மனதோ ?       இத்தமிழ்  நாடதும்  செய்திட்டப்  பாவம்              என்னதான்,  அறியோம்  பராபரமே !வனாந்தரம்  அழிந்தது  கடும்புயல்  தன்னால்              வளர்ந்திட்ட  மரங்கள்  சாய்ந்ததென்ன ,        வகையாய்  நிழல்தந்த  மரங்கள்பல்  லாயிரம்              வளைந்தே  வீழ்ந்தன  மண்மேலே !அனாதைகள் என்றே  தெருவினில்  நின்றனர்             ஆயிரம்  ஆயிரம்  மக்களெல்லாம்,       ஆற்றொணாத்  துயர்தனை  கண்டோம்  நாமெலாம்,             ஆண்டுகள்  போயினும்  மறந்திடுமோ ?இயற்கை  யானதோர்  சுனாமி  என்றிட              யாரைக்  குறைசொல்லி  என்னபயன் ?செயற்கை  யானதோர்  சுனாமி  என்றிட             சிக்குவார்  எவரேனும்  ஒருவரதில் !உயர்ந்தநற்  பதவியில்  கல்லார்  என்றிட             உருவாகும்  செயற்கைச்  சனாமியும்;பயனற்ற  தாகிடும்  அன்னவன்  தலைமையும்             பாரதம்  இன்றிதைக்  காண்கிறதே!மக்களின்  வாழ்வினில்  சுனாமி  ஒன்றின்று            மறுமுறை  வந்ததும்  மோடியினால் !தக்கவன்  அவனில்லை  என்பதே  உண்மையாம்            தரங்கெட்ட  செயல்தனைக்  கண்டுணர்க !எக்காலம்  மக்கள்  மீண்டும்யின்  நாட்டினில்            இயல்பான  வாழ்வினைக்  கண்டிடுவார் ,அக்கரை  அற்றதோர்  மோடியின்  செயலால்            அவலத்தைக்  கண்டதே  மக்கள்நிலை !அரும்பாடு  பட்டுசேர்த்த  அத்தனைப்  பணத்தையும்நாம்திரும்பவும்  வங்கிதனில்  சேர்த்திட்டு  அதையெடுக்கபெரும்பாடு  படுகின்றோம்  பிரதமனாம்  மோடியினால்!வெறுப்புதனை  விதைத்திட்டான்,  வெல்வானோ  மோடியினி ?நாடிதனின்  மேல்பாய்ந்த  நரேந்திர  சனாமியால்கேடதுவே;  நன்மையெதும்  கிடையாதே !-- கோடிமக்கள்வாழ்வுதனை  இழந்தின்று  வருந்துகிறார்  அவர்கள்வாழ்வுதாழ்வுற்றதும்  ஏற்கத்தக்க  தா ?               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com