சுனாமி சுவடுகள்: ஆர்.அருண்குமார்.

Updated on
1 min read

துளிர்களுக்கு சமாதி கட்டி
துவைத்து பிழிந்ததே சுனாமி.
கள்ளமில்லா உள்ளங்களெல்லாம்
கடலோடு மாய்ந்ததென்ன?

அலைகடல் ரசிக்க வந்தவர்களை
அரக்கன்தான் கொண்றதென்ன?
விலையில்லா உயிர்களுக்கு 
விபரீத தண்டனை ஏனோ?.

பழிபாவம் செய்வோரை விட்டு
பசியால் தவிப்பர்களை அழித்தாயே.
விழிகள் தினமும் கசிந்துருகி
விதியை நொந்து கலங்குகின்றன.

ஐயகோ என்ன கொடுமை
அநியாயமாக வந்த சுனாமியே.
மெய்யெல்லாம் நடுங்குகிறது
மேனிதான் தவிக்கிறது.

கனிவான வாழ்க்கை போதும்
காலமெல்லாம் இனித்திடவே.
இனியொரு சுனாமி வேண்டாம்
இதயமெ உடைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com