சுனாமி சுவடுகள் :  கு.முருகேசன்

Updated on
1 min read

கடலில் மீன் பிடித்தவனையே
கடல் பிடித்த சோகம் சுனாமி!
சுனாமியில்
எழுந்தது கடல்
விழுந்தது உடல்!

கடல் நீர்
உப்பாக இருந்தது
சுனாமி அன்று மட்டும் ஏனோ
தப்பாக இருந்தது!
நீ வங்கக் கடலா?
உயிர் வாங்கும் கடலா?

சுனாமியே!
நீ! சொல்லிவிட்டு வந்திருந்தால்
சுதாரித்திருப்போம்.
நீ! சொல்லாமல் வந்ததால்-எங்கள்  
சொந்தங்களைப் பறிகொடுத்தோம்!

நாங்கள்
கடலில் மீன் பிடித்தோம்
நீ ! கடற்கரையில்
மனிதர்களைப் பிடித்தாய்!
வலை போட்டவனையே
வளைத்துப் போட்டவன் நீ!

டிசம்பர்
வருடத்தில் மட்டுமா கடைசி மாதம்?
சிலர் வாழ்விலும்அதை
யே கடைசி மாதமாக்கினாய்!

சுனாமியே!
ஆறுகள் கடலில் கலக்கலாம்
நீ!
ஆட்களைக் கடலில் கலக்கலாம?
அதிகாலை
காற்று வாங்க வந்தவர்களின்
காற்றையே! வாங்கினாய்!

சுனாமி என்ற வார்த்தை
ஜப்பானில் இருந்து வந்தது
என்கிறார்கள்.
சுனாமியே!

நீ எங்கே இருந்து வந்தாய்!  
சுனாமியே!
நீ எத்தனை குழந்தைகளின்
பால் குடிக்கும் மார்பை எடுத்துக்கொண்டாய்!
தாய்ப்பாலை புட்டியில் கொடுத்தோம்
தாய்ப்பாசத்தை எப்படி கொடுப்பது?

 சோகத்தை சுமந்த சுனாமியின்
சுவடுகளுக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com