சுனாமி சுவடுகள்:  கோ. மன்றவாணன்

Updated on
1 min read

அழகு முகத்தில்
ஆறாத வெட்டுக்காயமாக
இரத்தமும் சீழுமாக வதைக்கிறது
சுனாமி
இன்னமும்
கடலோரத்தில் அமர்ந்து
காற்று வாங்கும்போதும்
சுடுகிறது
சுனாமி அனல்

கடலைத் தாண்டி ஊருக்குள் வந்த
சுனாமியின்
சுவடுகள் இங்கே…
பூகோளச் சின்னங்களாகவும்
சரித்திரப் பாடங்களாகவும்

காப்பாற்றுத் தாயே என
எங்கள்
கடலோரக் குப்பத்துக் கோவில்களில்
சுனாமி அம்மன் சிலைகள்

தனிப்பாடை
தனி ஊர்வலம்
தனிக்குழி என்றில்லாமல்
ஒரே குழியில்
உறவுகளைப் புதைத்தோம்
சாதிமதத்தையும் சேர்த்துத்தான்

பெற்றோரை இழந்த பிள்ளைகள்
பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்
துணையை இழந்த உயிர்கள்
தோழமையை இழந்த மனங்கள்
எனச்
சுனாமியின் சுவடுகள்
மீனவத் தெருக்களில் காய்கின்றன
ஆண்டுபல கடந்தும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com