சுனாமி சுவடுகள்:  ஆபிரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

சுனாமி சுவடுகள் பிணாமி
நாமத்தினாலும் உலாவரும்
எச்சரிக்கை கிடைத்தாலும் 
துச்சமென கொள்வதாலோ

அனாயசமாக சூரையாடி
உயிரையும் உடமையையும்
குழிதோண்டி புதைத்திட
வழி வகுத்து விடுகின்றது

ஞாலமே கண்கலங்கிடவே
வேண்டாத வேண்டுதலா
கனாக் கலைந்தது போல்
வனாந்திரமாக்கி செல்லும்

நம்தலை விதி என்னவோ
சேர்த்ததை இழக்கவும்
இழந்ததை சேர்க்கவும்
வாடிக்கை யாகிவிட்டது

முப்பக்கமும் கடல்மயம்
எப்பக்கத்திலும் ஆபத்தே
தீவினைப் போன்றன்றோ
வாழ்கின்ற வாழ்க்கையும்

மழை வருகிறதெனவே நாம்
குடையை  விரிக்கின்றோம்
நனையாதிருக்க மட்டுமே
மழை நிற்பதற்கு அல்லவே

இயற்கையின் சீரல்கள் 
காலநிலையை பொருத்தது
விரட்டிட முடியாது நாம் விலகிச்செல்வது நலமே

சுனாமி சுவடுகள்நினைவை விட்டு அழிவதில்லை
நம்  அழிவை நினைவு கொள்ள  வைத்தே மகிழும் சுனாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com