செத்துப் போனோர் பலநூறு சிதைந்து போன பலவூருசொத்தும் சுகமும் போயொழியத் துன்பம் மட்டும் நிறைந்திருக்கும்கொத்துக் கொத்தாய்ப் பலவுயிகள் கொண்டு போன சுனாமியதன்கத்து மோசைச் சுவடுமட்டும் காதில் வந்து மோதிநிற்கே!தந்தை தாயைத் பறித்தெடுத்துத் தரணி யிதிலே வாடவிட்டுச்சொந்த பந்த மேதுமின்றிச் சூழும் துயரில் தான்கிடத்திவிந்தை யுலகில் நடைப்பிணமாய் விழிபி துங்கி யலையவைத்தஅந்தச் சுனாமிச் சுவடுகளோ அழிய வில்லை நெஞ்சினுள்ளே!தேடி வைத்த பொருளனைத்தும் தின்று சுனாமி போனதினால்ஓடி வந்தே உதவினோரும் உடனி ருப்போம் என்றுரைத்துநாடி வந்த நல்லரசும் நகர்ந்து மெல்லக் கைவிடவும்கோடி யிடர்கள் சுவடுகளாய்க் கொண்டே வாழ்ந்து சாகிறாரே!அலைக ளாடும் கடலோரம் அனைத்தும் அழிந்து போனதுவும்விலையே யில்லா இன்னுயிர்கள் விழுங்கி மீண்டு போனதுவும்வலையே வாழ்வாய்க் கொண்டோரை வதைத்தே வாழ வைத்ததுவும்நிலையாய் மறையாச் சுவடுகளாய் நிற்க வைத்த சுனாமியாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.