மனிதர்களை
இன்னும் பயமுறுத்திக்
கொண்டே இருக்கின்றன
சுனாமிச் சுவடுகள்.
பத்து ஆண்டுகளாகியும்
சுனாமி தினத்தன்று
நெஞ்சுக்குள்
நடுக்கமே ஏற்படுகிறது.
ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும்
மக்களிடம்
அச்சத்தை உண்டாக்கவே செய்யும்
சுனாமிச் சுவடுகள்.
இறந்த உயிர்களையும்
இழந்த உடைமைகளையும்
எண்ணி ஏங்கவே செய்கின்றன
சுனாமிச் சுவடுகள்.
இயற்கையை மனிதர்கள்
எப்போதும் மிஞ்சவே முடியாது
என்பதை
அறிவித்துக் கொண்டே இருக்கின்றன
சுனாமிச் சுவடுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.