கோரம் நிகழ்வதெல்லாம்மனிதர் செய்யும் சோரம்கொடுமை மனிதர் செய்யும் வேலைகொடுமை இல்லை இயற்கை செய்யும் வேலைஇயற்கையைப் பழித்து கவிபாடும் கவிஞர்களுக்கு கண்டனத்தை கடுமையாய் கூறுகிறேன்உங்களைப்பழிப்பதால் இயற்கப்பிதாவின் பேரருளைப்பெறுகிறேன்ஆறுகளெல்லாம் அழித்து ஆலைகட்டியது நாம்காடெல்லாம் அழித்துகட்டடங்கள் கட்டியது நாம்நிலத்தையெல்லாம் வெட்டிஎடுத்தது நாம்நதியின் மணலெல்லாம் அள்ளிகதியற்றதாக்கியது நாம்வழியோடும் பாதையெங்கும்நடுகல்லை நட்டது நாம்கடல் பொங்கியழிக்கிறதெனபழிபோடுவதென்னவோ இயற்கை மீதுசும்மா இருந்தவன் சுருக்கு பையை என்றாவது பறித்ததா காற்று?பிரச்சினை இல்லாது படுத்துறங்கியவனை என்றாவது விழுங்கியதா நிலம்?சீரோடிருந்தவரை சீரோடு இருந்த வரைஎன்றாவது நீரோடு என்றாவது அள்ளியதா கடல்?எந்த மனிதனின் பணத்தைப்பிடித்து வைத்து ஏடி எம் வாசலில் என்றாவது நிற்கவைத்ததா சூரியன்?உலகை அழிக்கக் கிளம்பியகொடிய சாத்தானின் பிறப்பைபொங்கியெழுந்து மிரட்டித்தெரியப்படுற்றியதுஆழிப்பேரலை.ஏசுவுடன் சேர்த்து சிவனும் அல்லாவும் சாத்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்தனரோ அன்று.கனவுகள் பலவுடன்சுற்றிக்கொண்டிருந்த பீட்டரும் முத்துவும்மீன் அரித்த பிணங்களாய்கண்ணிழந் கரை ஒதுங்கினரே.ஆயுளின் பாதியை அர்ப்பணித்துவியர்வைக் கவி எழுதிய பணத்தில்வாங்கப்பட்ட அப்துல்லாவின் புத்தம்புது படகு சிதறிய சுல்லியாய் அடுப்பில் எரிந்ததே.ஐயோ எத்தனைசுவடுகளை காண்பேன்வலுவிழந்த இந்தக்கண்களால்?இயற்கை தேவகுமாரனின் செல்லப்பிள்ளைபூமியின் பூபாளக்காட்டில்புகுந்த புல்லுருவிகள் மனிதர்கள்.மானுட சிநேகத்திற்கு மலர்ந்தவைதான் குமுகம் வாழ இயேசுகுமரன் படைத்தான்காடும் மேடும் எங்கள்வனாந்தரத்தின் கனவுகள்.ஏகாதியப்பத்தியத்தின் எருக்கம் பாலாய் கரத்தை நீட்டியதுதன்கோரம் முகத்தைக் காட்டியது வான அரசியின் மேனியை குழைத்தது வான மகன் பிறந்த நாளோகடலுங் கொதித்ததுஆயிரங்கொடுமைகள் துள்ளிக்குதித்ததுநடந்த பிந்தானே நமக்கெல்லாம் ஞானம் கிடைத்ததுபாத்தி கட்டி பேத்தி கட்டி வளர்த்த காலமெங்கேஏத்தங் கட்டி இறச்சு நெல் வளர்த்த காலமெங்கேகாற்றடிச்சு பறந்த வெறும் பஞ்சாகிப் போயிடுச்சேமக்காத நெகிழிகளும் சிக்காத நச்சு வாயுகளும்வெறிச்சோடிப்போன வார்தா புயலாட்டமாகிப் போயிடுச்சே.புன்னைமரப் பூரிப்பும்கொன்றை மலர் வாரிப்பும்விட்டோடிப்போய் நெடுங்காலம் ஆயிடுச்சேசாலையெல்லாம் மரமாகிவீடெல்லாம் மலர்ச்சோலையாகிஇருந்ததெல்லாம் வெட்டியெறியப்பட்டதுவெப்பம் கொட்டி சுனாமியால் அறியப்பட்டதுசூடாகும் மண்மாதாஉன் மழலை செய்யும் பிழையைநீ மன்னிக்க மாட்டீரோசுனாமியின் சுவடுகள் மறக்கநீயொரு மழைச் சுப்ரபாதம் பாடு புன்னகைமலர்த்தும் இந்த நாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.