கண்ணில்லாதவனுக்கு கண்
ஒரு புதையல்!
பணமில்லாதவனுக்கு
மண்ணுக்கடியில் பொன்
கிடைத்தால் புதையல்!
சுருங்கிய தோல் முகத்தில்
சுற்றம் மகிழ
வாழும் மகிழ்ச்சியே
முதியோர் காணும் புதையல்!
அலுவலக அம்மாவின்
நுனி சேலை கிடைத்த
மகிழ்ச்சியே மழலையின்
புதையல்!
அலுக்காத கல்வியினை
சலிக்காமல் அளிக்கும்
ஆசிரியர் சமுதாயமே
மாணவருக்குப் புதையல்!
கணவன் குறிப்பறிந்து
வாழும்மனைவி கிடைத்தால்
கணவனுக்கு அது ஒரு
புதையல் மகிழ்வு!
தொட்டுவிடத் துடிக்கும்
தொடுதிரைக் கணினி
குடிசை மாணவருக்கு
ஒரு புதையல்!
தன்னிடம் இல்லாத
ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து
வரும் இன்பமே
வாழ்வின் புதையல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.