பச்சை மண்ணில் கால் பதித்து நித்தம் நித்தம்
நீர் பாய்ச்சி ஒரு பச்சை பயிர் பட்டாடை நெய்து
அதை தன் நிலத்துக்கு சூட்டி அழகு பார்க்கும் பிறவிக்
கலைஞன் அந்த உழவனிடம் மிச்சம் இருப்பது ஒரு
சிறு பச்சை துண்டு மட்டுமே !
பசி பசி என்று நாம் எல்லாம் சிவப்பு கொடி
பிடித்து ஊரெல்லாம் நியாயம் கேட்டு
அலைந்த நேரம், புசி புசி என்று பச்சைக்
கொடி காட்டி நமக்கு அன்னமிட்ட அந்த விவசாயி
இன்று ஊர் விட்டு ஊர் சென்று தன் குறை
தீர முறையிட்டும்... காட்டவில்லையே அரசாங்கம்
அவனுக்கு ஒரு பச்சைக் கொடி இன்னும் !
சிவப்புக் கொடி காட்டி அவன் குரலை ஒடுக்காமல்
ஒரு சிகப்பு கம்பளம் விரித்து அந்த பிறவிக் கலைஞனை
அரவணைத்து நம் அரசாங்கம் பேச வேண்டும் அவனுடன் !
அவன் குறை தீர்ந்தால் மன நிறைவு அவனுக்கு மட்டுமல்ல!
அன்னமிடும் அவன் கையை எதிர்பார்க்கும் நம்
அனைவரின் வீட்டிலும் அது அரசு ஏற்றிவைக்கும் பச்சை விளக்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.