பச்சை நிலம்: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்

Updated on
1 min read

மனிதன் இன்பமாய் இருக்க
இயற்கையைக் காப்போம்.
சூரியனை எழுப்புகின்ற சூரியன்
சுறுசுறுப்பில் கடிகாரத்தில் வீரியன்
நீரினைப் போல் நெஞ்சம் உடையவன்
நிலத்தைக் கவியாக்கிப் படைப்பவன்
வேறினைப் போல் மண்ணுக்கு இருப்பவன்
வெற்று உடலால் உழவன் உழைப்பான்.

நம் பசிக்கு அன்னமிடும் தாயவன்
கண் போல் மண் தாயைக் காப்பவன்
கடமையிலே தன் உடலைத் தேய்ப்பவன்
மண் மேல் மகிழ்ச்சி தனைப் பொங்குவான்
மனிதர் வாழ மண்ணை மேல் தாங்குவான்
மாயையான இவ்வுலகில் மதிகெட்ட நம் முன்னோர்கள்
வெறும் கல்லையும் மண்ணையும் கடவுள் என்றான்
இயற்கையினை இறைவனாக்கி என்னையும் வணங்க வைத்தான்

எது இல்லை இயற்கை
அது வெல்லாம் கடவுளோ
இயற்கை அது இயற்கை
இயற்கையை தெய்வமாய் வணங்குவோம்
இமயம் முதல் குமரி வரை
இயற்கையைக் காப்போம்
இறைவனை நேசிப்போம்
இனிமையாய் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com