பச்சை நிலம்:  கு.முருகேசன்

Updated on
1 min read
ஏர் பிடித்து விவசாயி
பாலைவனத்தையும்
 பச்சை நிலமாக்க
துடிக்கிறான்!
எழுதுகோல் பிடித்து அரசியல்வாதி
பச்சை நிலத்தையும்
பாலைவனமாக்க
துடிக்கிறான்!

நிலத்தை பசுமையாக மாற்றும்
உழவன் வாழ்கைதான்!
எப்பொழுதும்  
கருப்பாகவே இருக்கிறது!

பச்சை நிலத்தை பாலைவனமாக்க
ஒப்பந்தம் போடும் அரசு!
எந்த ஒரு பாலைவனத்தையும் பச்சை நிலமாக்க
எந்த ஒரு  ஒப்பந்தமும் போடவில்லையே!
நிலத்திலிருந்து பயிர்கள் எழுந்தபொழுது
மனித உயிர்கள் வாழ்ந்தது!
நிலத்திலிருந்து எரிவாயு எடுக்கும்பொழுது
மனித உயிர்கள் வீழ்ந்தது!
வானத்தில் நீலப்புரட்சி செய்தவர்கள்
யாரென்றே தெரியாது!
பூமியில் பசுமைப்புரட்சி செய்பவர்களை
யாருக்கும் தெரியாது!
அரசே! விவசாயக் கடனை
தள்ளுபடி செய்- அது
சாகுபடி செய்பவனையும்
சாகும்படி செய்கிறது!
உழுதவன் கணக்கு பார்த்தல்
உழக்குக் கூட  மிஞ்சாது என்பதால்
உழுபவனுக்கு கணக்கு தெரியாமல்
பார்த்துக்கொள்கிறது அரசு!
அரசே! நீ !
பள்ளிக்கூடம்  நடத்துகிறாய்
கல்லூரி நடக்கிறாய்
தொழிற்சாலையும் நடத்துகிறாய்
ஏன் விவசாயம் மட்டும்
செய்ய மறுக்கிறாய்?
படிக்காமல்கூட 
மனிதர்கள் வாழலாம்
உண்ணாமல்
மனிதர்கள் வழ்ந்ததில்லையே!
விவசாயிக்கு கடன் தர மறுக்கும் அரசே!
தொழிலதிபருக்கு நிலத்தை தருகிறாய்!
ஊருக்கே உணவு கொடுப்பவனின் உணர்வுக்கு
எப்பொழுது காதுகொடுப்பாய்!
பச்சை மையில்
கையெழுத்து போடுபவனை மதிக்கும் உலகம்
எப்போது விசாயியை மதிக்கிறதோ!
அப்போதுதான் உலகே பசுமையாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com