பச்சை நிலம்: ஆனந்த் சுப்ரமணியம்

Updated on
1 min read

பூமித்தாயின் கருவூலம்
மனித ஜாதியின் மூலதனம்

விவசாயிகளின் ஜீவாதாரம்
அனைவரின் பசிதீர்க்கும்  அன்னதானம்

மேகம் எனும் நட்பின் துணையோடு
ஈரப்பதத்தில் நனைந்து மிதந்து
மகிழுந்து கொள்ளும்

வளமான பூமியில் 
இதமான காற்றில்
இயற்கையின் அழகி்ல்
ஆனந்தம் கொள்ளும்

பச்சை நிலம்....

தமிழர் திருநாளின்
பிள்ளையார் சுழி

பொங்கும் பொங்கலின்
தாய் தந்தை

கலப்பை மற்றும் மாடுகளின்
தாய் வீடு

நாற்றை கருவுற்று
உரம் என்ற மருந்துண்டு

சக்தி தரும் பானகமான நீரை
நிறையவே அருந்தி

தன்னை தானே நன்றாக பாதுகாத்து
நெற்கதிர்களான குழந்தைகளை

ஆரோக்கியமாக ஈன்றெடுத்து
நம் இல்லங்களுக்கு தாரை வார்ப்பவள் தான்

இந்த பச்சை நிலத் தாய்

கிராமத்து வாழ்க்கையில்
ஓர் அங்கம்

நம் தாய் திருநாட்டின்
ஆன்ம பலம்

அதன் உயிர் மூச்சு உள்ளவரை
நம் சிரம் நிமிர்ந்து இருக்கும்
ஆகவே.....

அதை பொக்கிஷம் போல் பாதுகாப்போம்
நம் கடமையென நினைத்து நாம் செய்திடுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com