நிலம் தரும் வளம் வேறு
எது தரும்?
ஊனுடல் வளர்க்கவும்
மானுடம் செழிக்கவும்
நிலம் எல்லாம் தரும்;
பார்க்குமிடமெல்லாம்
பசுமை;
உன்னில் விதைத்த எதுவும்
வீணாய்ப் போவதில்லை;
நெல்லாய் மணியாய்,
நீளும் கொடியாய் செடியாய்,
நோய் நீக்கும் மூலிகையாய்,
சத்தான கீரைகளாய்
எல்லாம் தருகிறாய்;
அகழ்வாரை மட்டுமின்றி
இகழ்வாரை,பொய் புகல்வாரை,போலிப்
புகழ்வாரையும் கூட நீ
தாங்குகிறாய்!
பொறுமையின் சிகரமே,
பூமித் தாயே போற்றுகிறேன் மகிழ்ந்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.