பச்சை நிலம்: சீர்காழி .ஆர் .சீதாராமன் 

Updated on
1 min read

 " தேடினேன் தேடுகிறேன்
    தேடுவேன்   ஆனாலும்
    இன்னும்    தென்படவில்லை
     பச்சை      நிலம் "

    "காணி நிலம் வேண்டும்
     என்றான்  பாரதி   அன்று 
      காணி பச்சை நிலம்
      கேட்பான் இருந்திருந்தால்
     இன்று "

    " வறண்ட      இருண்ட
      நிலத்தில்     வீடும் கடையும்
      மாளிகையும்   வந்து
      புகுந்த   போது பச்சைநிலம்
      கேள்விக்     குறியே "

     " பச்சை நிலம்   பாதுகாக்க
      வேண்டிய   பெட்டகம்
       எதிர்கால      தேடல் 
       பொக்கிஷம்  மாமருந்து "

     " வறண்ட        நிலத்தில்
       பச்சை நிறம்  பூசிப்
       பார்க்கும்  நிலை வருமோ
       பசுமை   நினைவும்
       நிறம்     மாறிவிடுமோ ?"

       " மனித சக்திகள்  விஞ்ஞான
      வளர்ச்சிகள்  இயற்கையின்
        துணையோடு பச்சைநிலம்
      பட்டொளிவீசி   பறக்க 
       முயற்சிப்போம் எந்நாளும் "

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com