பச்சை நிலம்: ப. திருவேங்கடம்

Updated on
1 min read

இச்சை பூமி என் 
பச்சை நிலம் பார்க்க வந்தேன்
பச்சை படாம் விரித்தாற்போல
போர்த்தியிருந்த பசுமையெல்லாம்
போனதெங்கே..?

காணும் தூரமெல்லாம்
கவினுறு பூக்கள்
பச்சை இலைகள்
பரிமளிக்கும் அழகெல்லாம்
போனதெங்கே..?

வயல்களில் நெற்பயிர்கள்
வாடிக்கிடக்க வயிறு எரிகிறது
நெல்மணிகளை கொத்தவரும்
குருவிகள் போனதெங்கே..?

காய்கறி செடி கொடிகள்
கரும்பு வாழை
வளங்கொழிக்கப் பெய்யும்
வான்மழை வராமல்
போனதெங்கே..?

நஞ்சை நிலமெல்லாம்
புஞ்சை நிலமாகி
காங்கிரீட் கட்டிடங்களால்
விளைநிலத்தை வேரறுத்தால்
விவசாயம் செய்வதெப்படி..?

குளங்கள் ஏரிகளில்
குப்பைகளைக் கொட்டி
வீட்டு மனைகளாக்கி
நீர்வரத்தை தடுத்தால்
வேளாண்மை செய்வதெப்படி..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com