பச்சை நிலம்: மு.செல்வராசன்

Updated on
1 min read

பச்சைநிலம் இந்நாளில் பாழ்ங்காடாய்ப் போனதற்கு 
இச்சைமிகக் கொண்டார் இழிசெயலாம் -----சிச்சீசீ 
அச்சமின்றி அத்தகைய தீயவரைக் கண்டால்நீ 
எச்சிலைக்  காறி உமிழ். 

உச்சந்   தலைமுதலாய்  உள்ளங்கால்  ஈறாக 
நச்செனச்  சுட்டெரிக்கும் நாள்வெயிலில் -----அச்சச்சோ
ஓயா(து)   உழைக்கும் உழவர் அருஞ்செயலால் 
நாவார  உண்கின்றோம் நாம்.

பெற்ற  குழந்தைபோல்  பேணிவந்த  பச்சைநிலம் 
வெற்றுத்   தரிசாகும் வேதனையால் -----கற்றா
மனம்போல் கசிந்துருகும் மண்ணின் உழவர் 
இனம்கண்டு  கைகொடுப்பீர்  இன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com