பச்சை நிலம்: வேம்பார் மு.க.இப்ராஹிம்

Updated on
1 min read

பச்சை பசெலென இருந்த நிலங்கள்
பசலை நோயாய் ஆனதென்னே..?
பன்னாட்டு உரங்கள் போட்டு
பாழாய் போனதென்னே..?

நிலத்தடி நீரையெல்லாம்
நிறுவனங்களுக்கு விற்று விட்டு
இயற்கை வாயு ன்னு
எங்கள் வயிற்றில் அடிப்பதென்னே..?

பரந்து விரிந்த ஏரியெல்லாம்
உள்ளங்கை அளவு சுருங்கியதென்ன..?
பச்சை பசேல் நிலமெல்லாம்
பட்டா நிலமாய் ஆனதென்னே..?

வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கிடக்குது பச்சை நிலம்..
வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றி
ஏங்கித் தவிக்கிது ஒரு இனம்..!

விவசாயம் இனி நமக்கில்லை
விடிவு காலம் ஏதுமில்லை..
எலிக்கறி சாப்பிட்டாலும்
ஏன்னு கேட்க நாதியில்லை..

பச்சை நிலம் கேட்டு
பட்டினியால் கிடக்குது ஒரு கூட்டம்
பார்த்து பரிகாசித்து
காரில் பறக்குது மறுகூட்டம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com