கைகோர்ப்போம்: ஆனந்த் சுப்ரமணியம்

Updated on
1 min read

நம் தேசம் மிளிர்ந்து முன்னேற
விரைந்து கைகோர்ப்போம்

உச்சத்தை உற்சாகத்தோடு 
தொட்டுவிட கைகோர்ப்போம்

மற்றவர்க்கு மனதார உதவிட
கைகோர்ப்போம்

ஆலய தேரை பக்தியோடு 
இழுத்திட கைகோர்ப்போம்

அழகிய நடனம் இணைந்துஆடிட
கைகோர்ப்போம்

வலுவான பொருளை மிக 
எளிதாக தூக்கிட கைகோர்ப்போம்

ஒருவரால் முடியாத பட்சத்தில்
பலராக சேர்ந்து கைகோர்ப்போம்

ஒற்றுமை உயர்ந்து ஓங்கிட 
கைகோர்ப்போம்

தீயதை முழுதாய் அழித்திட
கைகோர்ப்போம்

திருமண பந்த்தத்தில்
அன்பாய் நுழைந்திட
கைகோர்ப்போம்

உறவுகள் என்றும் நம்முடன்
நிலைத்திட உளமாற
கைகோர்ப்போம்

நட்பு என்றும் விலகாதிருக்க
புரிதலோடு கைகோர்ப்போம்

நம் சக்தியை நாமே உணர்ந்திட
நம்பிக்கையோடு இரு  கைகோர்ப்போம்

எல்லையில் பாதுகாக்கும் 
நம்மவரின் குடும்பத்திற்கு 
உதவிட கைகோர்ப்போம்

ஐந்தறிவு ஜீவனுக்கு அநியாயம் 
நடப்பதை தவிர்த்திட கைகோர்ப்போம்

எளியோரை வலியோராக்க
மனமுவந்து கைகோர்ப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com