கைகோர்ப்போம்: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

கைகோர்த்தல்,
இணக்கத்தின் அடையாளம்;
வணக்கத்தின் வழித் தோன்றும்;
நாட்டொற்றுமைக்கு அடிகோலும்
கூட்டுறவுச் சின்னம்; ஓடும்
உதிரத்தில் கலந்த
காதலும் கனிவும் சந்திக்கும் 
மையப்புள்ளி;
சரியும் ஆடையைச்" சட்"டெனச்
சரி செய்ய முந்தும்
கரங்களின் கோர்ப்பு
நட்பின் சிறப்பு;
அதர இதழ் பருகி ஆர்வம் 
மீதூற பின்னும் கைகோர்ப்பு
பரவசச் சிலிர்ப்பு;
கைகோர்ப்போம்!
காலம் முழுதும் வாழ்வோம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com