கைகோர்ப்போம்: திருமாளம் எஸ்.பழனிவேல்

Updated on
1 min read

கைகோர்ப்போம் 
வாருங்கள் தோழர்களே..
கடற்கரை பாடத்தை 
அஞ்சலில் கற்றுத் தேற..

தீமைகள் கருவேல மரமாய் 
வளர்ந்து நிற்கின்றன 
வெட்டிச் சாய்க்க 
ஒரு கோடி கைகள் போதாது 
மேலும் மேலும் 
கைகோர்ப்போம் வாருங்கள்..

வறட்சி ஆறாய் 
பெருகி ஓடுகிறது 
கருகிய பயிர்கள் 
டெல்லியின் கதவுகளை 
தட்டும் ஓசை 
எல்லை தாண்டி 
சீனா வரை சென்றதால் 
உள்ளூர்காரர்களின் காதுகளில் 
விழவேயில்லை
முதுகெலும்பை நிமிர்க்க 
கைகோர்ப்போம் வாருங்கள்..

மைல் கற்களில் மட்டுமல்ல 
அதிகார மையங்களின் 
மனங்களிலும் மாற்றம் வர 
அலைக்கடலில் இறங்காமல்  
அமைதியாய் போராடுவோம் 

இங்கோர் புதுயுகம் மலர்ந்திட 
இணைவோம் 
நல்லெண்ணஙகளால் 
கை நீட்டுங்கள் 
கைகோர்க்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com