சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம் இவ்வுலகில்
கண்ணிருந்தும் குருடராய்
காசுஇருந்தும் கருமியாய்
காலமெல்லாம் வாழ்ந்து என்ன பயன்
அடுத்தவர் நஷ்டத்தை
அயலாரின் துன்பத்தை
கேட்பாரற்று நீயும் ஒரு நாள்
வீதியில் கிடக்க நேரிடலாம்
மனிதனாக பிறந்த நீ
மனித நேயத்தை மல்லிகை
பந்தலாய் வளர்த்திட வேண்டும்
ஒருங்கிணைந்து வாழ வேண்டும்
நன்மைகள் நடக்கட்டும்
புதுமைகள் பிறக்கட்டும்
புத்துணர்ச்சி ஒருங்கிணையட்டும்
விஞ்ஞானம் வளர்ந்திட
வியாபாரம் சிறந்திட
ஒன்று கூடி வெற்றி பெறுவோம்.
ஒற்றுமையாய் வாழ்வோம்
ஒருங்கிணைந்து நடப்போம்.
தமிழ்மொழியாம் செம்மொழியை உயர்த்துவோம்
தினமும் மனித நேயத்தை வளர்த்திடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.