கிளைகள் கைகோர்த்தால்
சுழன்று வரும் காற்றைக் கூட
சுகமாய் என நலம் கேட்கும்..!
வான்துளி
கை கோர்த்தால்
வற்றாத நதியாய்
ஆர்ப்பரிக்கும்..!
பூக்கள்
கை கோர்த்தால்
புயலாய் உருவெடுக்கும்..!
கடல் நீர்
கை கோர்த்தால்
ஆர்ப்பரிக்கும் அலையாய்
கரையைத் தகர்க்கும்..!
தேனிக்கள்
கை கோர்த்தால்
எரிமலையிலும் கூடு கட்டும்..!
எறும்புகள்
கை கோர்த்தால்
இரும்பையும் துரும்பாக்கும்..!
கை கட்டி நின்ற இனம்
கை கோர்த்தால்..
விடியலுக்கு வழி வகுக்கும்..!
அது
பகைமைதனை வேறறுக்கும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.