கை கோர்ப்போம் : கே.நடராஜன்

Updated on
1 min read

"பார்க்கிறேன் நான் ஒரு கை"  என்று சொல்லும் 
வாய்  "கோர்க்கிறேன் என் கை உன்னுடன்" என்று 
சொல்ல வேண்டும் ...

கை கோர்த்து நிற்கும் மனித சங்கிலி தொடுவது 
இரு ஊரின் எல்லையை  மட்டுமல்ல ! எல்லை தாண்டி 
இருக்கும் இதயங்களையும் சேர்த்துதான் !

நிலவுக்கே மின்தூக்கியும்  படியும் அமைக்க 
வழி சொல்லும் இன்றைய இளம் தலைமுறை 
நமக்கு நினைவு படுத்தும்  பாடம்  "கூடி வாழ்ந்தால் 

கோடி நன்மை " 

இல்லை இனிமேல் எங்கள் ஊருக்கு ஒரு எல்லை 
இல்லை இனிமேல் எங்கள் நதிக்கு  ஒரு எல்லை 
இல்லை இனி ஒரு சாதி மத பேதம் எங்கள் நாட்டுக்குள் 
இல்லை இனி ஒரு மத துவேஷம் எங்களுக்குள் !

இது எதுவும் இல்லையென்றால்  வானம்தான் எல்லை 
நம் நாட்டின் மறுமலர்ச்சிக்கு...  வளர்ச்சிக்கு !
இணையும் கைகள் இணைக்கும் நம் 
இதயங்களையும் ! இனித்து மலரும் புது உறவும் !

உறவுகள் ஒன்றானால்  சச்சரவு ஓடி மறையும் !
இதயங்கள் இணையும் நேரம் நதிகளும் இணையும் தன்னால் !

இன்னும் என்ன தயக்கம் நமக்கு ?  கோர்ப்போம் கைகளை 
இன்றே ! நிலவுக்கு படி கட்ட நினைக்கும் நம் பிள்ளைக்கு 
காட்ட  வேண்டும் பச்சைக் கொடி நாம் அனைவரும் நம் 
கை கோர்த்து ! நிலவின் படிக்கட்டுக்கு நாம் அமைத்துக் 
கொடுக்கும் வலுவான  அடித்தளம் இணையும் கைகளே !
கை கோர்ப்போம் ...கை கொடுப்போம் ...இளம் 
விஞ்ஞானிகள் கனவு  நனவாக !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com