சூரிய தாகம்:  இளவல் ஹரிஹரன்

Updated on
1 min read
சுட்டெரிக்கும் சூரியனோ கொண்ட தாகம்    சுகந்தருமா அனலடிக்கும் வியர்வை ஊற்றாய்க்கொட்டவைக்கும் கொதிக்கவைக்கும் கோபத் தீயாய்    கொழுந்துவிட்டு மேலெல்லாம் வீசும் வெப்பம்சட்டையினை அவிழ வைக்கும் வெற்று மேனி    தண்மைகொள்ள தண்ணீரைத் தேடும் காற்றில்வெட்டவெளி வீசவைக்கும் சாலை தோன்றும்   வெயில்காட்டும் கானல்நீர் நமைஏ மாற்றும்.மரங்களற்ற பாழ்வெளியாய் மாறிப் போன    வயல்கண்ட வேதனையில் கண்ணீர் சிந்தும்தரங்கெட்ட மனிதரெலாம் இயற்கை யோடு   சண்டையிட்டு தன்னலத்தால் சிதைத்துப் போட்டுவரவில்லை மழையெனவே புலம்பு கின்றார்   வறண்டநதி ஈரமாக ஏக்கங் கொண்டுசிரந்தூக்கி வானத்தை நோக்கு கின்றார்   சூரியனும் பின்விளைவாய்ச் சுடுகின் றானே.தாகத்தைத் தணிப்பதற்கு தண்ணீர் வேண்டும்    தண்ணீரைக் கொணர்வதற்கு மேகம் வேண்டும்மேகந்தான் வருவதற்கு மரங்கள் வேண்டும்    வெற்றுநிலத் தடிநீரும் பெருக வேண்டும்ஏகமாக இயற்கையினைக் காக்க வேண்டும்     எங்கெங்கும் நதிநீரை இணைக்க வேண்டும்பாகமாக நமதுழைப்பைப் பேணி வந்தால்     பகலவனின் தாகமதும் தணிந்து போமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com