சூரிய தாகம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

Updated on
1 min read

* தாகம்...
  தேவை என்பது
  இதன் பொருளாம்.

* சிலரின் தாகம்
   நினைத்தது கிடைத்துவிட்டால்   
   தீர்ந்து விடும.

* சூரியனும் அரசியல்வாதியும் 
   இந்த விஷயத்தில் ஒன்றுதான் 
   எப்போதும் தாகம் தீர்வதில்லை.

* மொத்த நீரைக் குடித்தும்
   தாகம் தீராமல்
   சுட்டெரிக்கிறது சூரியன்.

* அட்சய பாத்திரம் போல்
   கொடுத்துக் கொண்டேயிருந்தால்
   ஒருவேளை தீரலாம் சூரிய தாகம். 

* எப்போதும் மழை தரும் 
   அட்சய பாத்திரம் 
    மரம் தானே?

* மரம் நட்டு மழை பெற்று 
   சூரிய தாகம் தீர்ப்போம்
   சுகமாய் வாழலாம் நாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com