நீர்த்துளிகளில்
சிதறுகிறது
சூரிய வெளிச்சம்
தடையின்றி வருகிறது
தாகம் தீர்ந்திடுமோ
எல்லைத் தகராறு.
தங்கச்சூரிய ஒளி
வெள்ளியாக தெரிகிறது
தண்ணீர்.
கடும் கோடை காலம்
குழாயடியில் நிறைய வருகிறது
தண்ணீர் சண்டை
பசித்த வயிறு
அடங்குமா...
பச்சைத் தண்ணீருக்கு?
தண்ணீர்க் குழாய்
திறந்ததும் தீர்ந்தது
தாகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.