குட்டை நீரை குடித்திருந்தும்
கோர தாகம் தீரவில்லை!
குளத்தின் நீரை குடித்திருந்தும்
கொஞ்சம் கூட போதவில்லை!
ஏரி நீரை குடித்திருந்தும்
எடுத்த தாகம் நீங்கவில்லை !
வாய்க்கால் நீரை குடித்திருந்தும்
வறண்ட நாவில் ஈரமில்லை !
ஆற்று நீரை குடித்திருந்தும்
ஆறா தாகம் சோரவில்லை!
ஊற்று நீரை குடித்திருந்தும்
உறுத்தும் தாகம் மாறவில்லை!
பலர் கண்ணீர் கொடுத்தே பதறுகின்றார்-என்
பாழும் தாகம் இனி தீர்ந்திடாதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.