சூரியதாகம்: மீனாள் தேவராஜன்

Updated on
1 min read
நிலமகள் காவலனே! நீர்மகள் கணவனே!புல்நெல் புரவலனே! மாரிமழை நாயகனே!ஆழ்கடல் நீர் தூக்கிக் கார்மேகம் தன்னைமழையாய் உருவாக்கும் வெய்கதிரோனே!உலகத் தாகமதைத் தீர்க்கும் சூரிய வள்ளலே!சாலப் பெருகிவிட்டதே இன்று உம் தா(க்)கம்.தாகம் தணிவிக்காது அனலாய் ஆக்கிவிட்டோமோ!வேகமாய் வெந்தணலாய் ஆக்கியது யாமன்றோ?ஐயமின்றி அஃது யாம் செய்த பிழையே! புத்துலகுபடைக்கின்றோமென பாவிகள் யாம் அடவிகளைஅழித்துவிட்டோம்! சூரியன் தாகத்தைப் பெருக்கிட்டோம்!அழிவும் ஆக்கமும் அகிலத்தில் அவன் செயலேயன்றோ!அன்றுமுதல் இன்றுவரை நீர் அளித்த கருணைமழைஎன்றும் எங்களது தண்ணீர் தாகத்தை வாழ் வசதியைவளம் கொழிக்கச்செய்ததே! நன்றி மறந்த நாய்கள்நாங்கள் விண்வெளி ஓட்டை விளைவித்துக் குற்றத்தைமறந்துவிட்டுக் கொடுமை கடுமை அனற்காற்றுபறக்கிறது என்று மடமை கொண்டு மறுப்பளிக்கிறோம்அளிக்கும் நின்னொளி தண்ணொளியானால் ஏது பயன்?ஒளிந்திருக்கும் நிலக்கிருமிகள் நீள்வாழ்வு வாழமன்றோ?நின்னொளி கனலொளியாய்க் குவிந்தால் ஏது பயன்?நின்னொளி பட்டு புல்பூண்டு பூண்டோடு அழியுமன்றோ?புவி காக்கும் புண்ணியன் தாகம் (ஆசை)வெப்பமயமாகலன்றுபுவியை வாழ்வாங்கு வாழ்விப்பதே சூரியனின் தாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com