கோடை மழை: அ.வேளாங்கண்ணி

Updated on
1 min read
வாடிய பயிர்சிலிர்த்து எழுந்ததுகோடை மழைவற்றிய நதிதாகம் தீர்த்ததுகோடை மழைவெளிப்படும் வியர்வைக்குவிடுமுறை அளித்ததுகோடை மழைகிணறும் குளமும்மகிழ்ச்சியில் திளைத்ததுகோடை மழைமேகத்தின் சோகம்மகிழ்வைக் கொடுத்ததுகோடை மழைஅழுக்கான குடையையும்குளிக்க வைத்ததுகோடை மழைவிடுமுறை வாண்டுகள்கத்திக் களித்தன‌கோடை மழைகோடைக் கடைகள்வேடிக்கை பார்த்தன‌கோடை மழைகருப்புக் கண்ணாடிஒருநாள் பதவிநீக்கம்கோடை மழைகானல் நீர் போய்கண்களில் நீர்கோடை மழைவறண்ட பூமிசிரித்துக் கிடந்ததுகோடை மழைமறந்த மலர்கள்மீண்டும் பூத்தன‌கோடை மழைதர்பூசணி கிர்ணியைஅழுக வைத்ததுகோடை மழைகரும்பையும் நன்னாரியையும்காய வைத்ததுகோடை மழைஎவர் செய்த தவத்திற்குவரமாய் கிடைத்துகோடை மழைமரங்கள் வெட்டியும்ஏனோ பெய்கிறதுகோடை மழைதுரோக மனிதருக்குமன்னிப்பேன் கொடுத்ததுகோடை மழைசூரியனைக் கொஞ்சம்நிதானிக்கச் சொன்னதுகோடை மழைசந்திர மண்டலத்தைநீரால் கட்டியதுகோடை மழைஎப்படியாவது பெய்துதண்ணீர்குடங்களை நிறைப்பாயாகோடை மழை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com