கோடை மழை கொடையாக வாராதோ
கொளுத்தும் வெயிலை தணிக்கச் செய்யாதோ
ஆடை நனைய பெய்யாதோ ஆலங்கட்டி விழாதோ
பாடைகட்டி ஒப்பாரி வைத்தோம்; பாரில் மழை பெய்திடவே
மூட நம்பிக்கை என்றாலும் பரவாயில்லை -இந்த
கோடை மழை வந்தால் போதுமே; மண்ணும் மனமும் குளிருமே
காடு கழனியெல்லா காய்ந்து கிடக்கிறதே பாழும்
கடவுளும் கண்மூடி படுத்திடுச்சோ ?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.