வறண்டு போன மணற்பரப்பாய்
நீ(ரி)யின்றி வாடிப்போனதொரு (வ)மனம் ...
வசந்த மில்லா வாழ்க்கை
சிறப்பில்லாதொரு தனிமை ...
சிந்தனைக்குள் உலவும்
சிறைபடா சிறு உணர்வுகள் ....
மீளாத மாளாத நினைவுகள்
சூழவொரு சுதந்திரமுமில்லை ....
வேர் விட்ட மரமாய் இருந்தும்
கிளைகளில் உறவாடும்
இலைகளுக்கும் உயிர்ப்புகளில்லை ....
அவ்வேளை பாலைவனச் சோலைக்குள்
தஞ்சம் புகும் பெருமழையாய்
வறண்டு போனதொரு வாழ்க்கை
துளிர்விட கோடைமழையாய்
நீ எப்போதும் வேண்டும் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.