கோடை மழை:  ஆனந்த் சுப்ரமணியம்

Updated on
1 min read

மழை என்றாலே
ஆனந்தம்
கோடை மழை என்றால்
பேரானந்தம்

வருண பகவான்
பூமித் தாய்க்கு தரும்
அன்புப் பரிசு
கோடை மழை

வெப்பத்தின் சூழ்நிலையை
தலைகீழாய் மாற்றும்
தன்மை கொண்டது
கோடை மழை

சூரியனுக்கும்,
வருணனுக்கும்
இடையே நடக்கும்
ஒப்பந்தத்தில் தான்

அனைத்து ஜீவராசிகளும்
தத்தம் வாழ்வாதாரத்தை
ஆரோக்கியமாக
அனுபவிக்கின்றன

கோடை மழை
சிறுவர்களின் மகிழ்ச்சி

அடுப்படியில் வேகும்
பெண்ணினத்திற்கு
வரப்பிரசாதம்

வேர்வை சரீரம் கொண்ட
மானிடர்களின் உள்ளத்தை
குளிரவைக்கும் அற்புத மருந்து

அந்த மழையில் நனைவதே
தனி சுகம்

கோடை மழை நின்றவுடன்
நிலவும் சூழலை கொஞ்சம்
பார்ப்போம்

இதமான வானம்
பதமான பூமி
பறவைகளின் கூக்குரல்
சில்லென்ற குளிர் காற்று

மனித மனம் அனுபவிக்கும்
குதுகூலம்
ரம்மியமான சுற்றுப்புறம்
அம்மா தரும் சூடான தேனீர்

கூடவே கிடைக்கும் நொறுங்குத் தீனி
ஆண்டவா.....
வெப்பத்தை சிலகாலம் தா
கோடை மழையை நீண்ட காலம் தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com