கோடை மழை : கே.நடராஜன்

Updated on
1 min read
சாரல் மழை ....தூறல் மழை ...அடை மழை !அடை மொழி உனக்கு எதுவானாலும் மழை நீ எனக்கு ஒரு நன்கொடைதான்  எப்போதும்!கோடை வெயிலில் வாடும் இந்த மண்ணுக்கு ஒரு கொடை  மழையாய் நீ வரவேண்டும் மண்ணும் என் மனசும் குளிர ! வருவாயா நீ கோடை மழையே ?குடை துறந்து  உன் கொடையில் நான் என்னை  மறந்து துள்ளி விளையாட சீக்கிரமே வந்து விடு மழையே !அடை மழையாய் நீ என்  மண்ணை புரட்டி போட்ட சமயம் என்ன மழை ..என்ன மழை ...விடாமல் பேய்   மழை என  நான் உன்னை வசை பாடியது உண்மை ! இன்று சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில்  ஒரு சொட்டு மழைநீருக்கு காத்திருக்கும் பல உயிரில் நானும் ஒருவன் !நான் பாடிய வசைமொழி மறந்து மன்னிக்க வேண்டும் என்னை மழைத்  தோழி நீ   ! இசைக்க வேண்டும் ஒரு இனிய கீதம் நீ எனக்காக !இடி மழை மின்னலுடன் நீ ஆட வேண்டும் ஒரு அழகு நாட்டியம் என் மண்ணில் ...கோடையில் உன் இசை நாட்டியம் கட்டியம் கூற வேண்டும் ஒரு கோடை இசை விழாவுக்கே !தட்டாமல் நீ வரவேண்டும் கோடை மழையே ! கை தட்டி உன்னைஅரவணைக்க காத்திருக்கிறோம் நானும் என் மண்ணும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com