கோடை மழை: அதியணன்

Updated on
1 min read

மேகத்தில் தாமியாய், 
மின்னலோ பூக்காதோ?
இடிகளும் அதைக்கண்டு-தன் 
இதழ்களால் சிரிக்காதோ? 

வானத்தின் கைபேசி, 
வங்கத்தின் அலையுடுத்தி, 
கோடை முகில் கடத்தாதோ?-மழை 
குறுஞ் செய்தி பொழியாதோ?

தூறலென முகநூலில், 
தூரிகையால்  கிறுக்கிவிட்டால், 
பூமியெங்கும் பகிரச்சொல்லி-அதை  
புல்லினங்கள் கேட்காதோ?

வானவில் தேவதையும், 
வருணனை காதலிக்க, 
கட்செவி அஞ்சல் கொண்டு-இனி 
காற்றினில் பறக்காதோ ?

புஞ்சையும் நஞ்சையுமே,
புதுமழை செயலிகளை,
பதிவிறக்கம் செய்யாதோ ?-அதை 
பசுமைகொண்டு களிக்காதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com