கோடை மழை: மீனாள் தேவராஜன்

Updated on
1 min read
காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்குபார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியைகோடைஇடி முழங்குமா?முழங்குமா? கோடி(புது) மேகஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா?அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடைஒடப்பெல்லாம் உன்னை அடக்கி வைக்கவில்லையேகார்கால வெள்ளத்தைக் கருதாமே வீணாக்கிட்டோமேஊரெல்லாம் சுத்தி வந்தாலும் உழக்கு தண்ணில்லைதரையெல்லாம் காய்ந்து புழுதி பூத்துப்போச்சுனுபுழுதி அடங்க பூப்பூவாய்ப் பூந்த கோடைமழையே!தகிக்கும் வெப்பத்தால் நாங்க வெந்து புழுங்கையிலேவேக்காடு தணிய வைச்ச குளிர் வான்மழையேபொட்டுத் தண்ணீர் குடிக்க இல்லாமே தொண்டை காய்ந்திருக்கபொட்டுப் பொட்டாய் விழுந்து கொட்டிய கோடை மழையேபுலன்கள் கெட்டுப் புவியைச் சூடாக்கி நீரில்லமேகலங்கித் தவித்து நிற்கையிலே கோடை மழை நீஎங்க உச்சிகுளிர உள்ளம் குளிரப் பெய்தாய்வங்கக்கடல் நீரெடுத்து தங்கமழை தந்தாய்!ஆயிரங்காலாய் நீ மண்ணில் விழுகையில்ஆயிரங்குதிரை அதிரஓடிவரும் ஒலி கேட்கும்அலைஅலையாய் நீர் வழிந்தோடும் சாலையெங்கும்சலசலக்கும் உன் சலங்கையொலி எங்கும் கேட்கும்இறக்கை விரிக்கும் பறவைக்குஞ்சுகள்குதூகுலமாய்க்குட்டிக்குளத்தில் குளித்தெழும்புத்தம் புது மழைபட்டு, புளகிதம் கொண்டமண் புதுமணம் எங்கும் வீசும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com