கோடைமழை ஆங்காங்கே குறு மழையாய் பெய்தாலும்.கோடை இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்தாலும்.கூடுதல் மகிழ்ச்சிக்கு குறைவில்லை; துன்பமில்லை;.கேடுதரும் வெப்பத்தை சிறிதாய்த் தணித்து வைப்பதால்..வெப்ப நோய்கள் விலகிடும்; வீரிய பிணிகள் குறைந்திடும்;.கப்பிய தாகம் தீர்த்திடும்; கால் நடைகளும் பிழைத்திடும்;.வெடிப்புகள் நீங்கிடும் நிலத்தில் ; உழவர் கலப்பையை.துடிப்புடன் ஒட்டி மென்மையாக்கி மேலும் மகிழ்ந்திடுவார்..மழைத்துளி மண்ணில் வீழ்ந்ததும் மண்மணம் வீசிடும்;.மறைந்து வாழும் பூச்சிகளாம் உழவரின் நண்பர்கள்.வேதியல் மாற்றம் செய்ய வெளியே விரைந்திடுவர்;.விளைந்திடும் கோடைப்பயிர் ; விவசாயி மகிழ்ந்திடுவார்..கோடைத் தூறலை வரவேற்போம் ; குடைகளை சுருக்குவோம்;.குளிர் தென்றலென எண்ணி மகிழ்வோம்; சிறிதாறுதல் பெறுவோம் ;.கூப்பிய கைகளுடன் இயற்கையை வணங்குவோம் ; வாழ்த்துவோம்;.கொண்டாடுவோம் இந்தத் தென்மேற்கு மழைத்தாயின் சிறுமகளை..தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.